
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேல்மருவத்தூர் சென்று திரும்பிய 24 பேர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னபர்கூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று திரும்பிய பேருந்தில் பயணித்த ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 பக்தர்கள் காயமடைந்தனர், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.