தேநீர் விருந்தில் பாராட்டுச் சான்றிதழ்: கிரண் பேடி மன்னிப்பு கேட்க நாராயணசாமி வலியுறுத்தல்

தேநீர் விருந்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த முயன்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
தேநீர் விருந்தில் பாராட்டுச் சான்றிதழ்: கிரண் பேடி மன்னிப்பு கேட்க நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி அமைச்சரவைக்குத் தெரியாமல் தேநீர் விருந்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த முயன்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மிரட்டுவதாக இருநாள்களுக்கு முன்பு கிரண்பேடி கூறியது நகைச்சுவையாக உள்ளது, இது உண்மைக்கு புறம்பானது. அவர் தான் கடந்த 3 ஆண்டுகளாக சிபிஐ வைத்து மிரட்டி வருகிறார்.

ஆனால், தன் மீதான தவறை மறைக்க முதல்வர், அமைச்சர்கள் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். குடியரசு தின விழாவுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வணக்கம் செலுத்திய போது கையை உயர்த்தி மரியாதை செலுத்தவில்லை என்று அவமானப்படுத்தினார். இருப்பினும் புதுச்சேரி மக்களை அவமதிக்கும் விதமாக செல்லிடப்பேசியில் கவனமாக இருந்தார். குடியரசு தின விழா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை.

குடியரசு தின தேநீர் விருதில் திடீரென பாராட்டு விழாக்களை நடத்துவது விதிமீறல் செயலாகும். சட்டத்தைப் புறக்கணித்து சில அதிகாரிகளுக்கு சான்றிதழ் கொடுப்பதாக அறிவித்தார். முதல்வர், தலைமைச் செயலர் பார்வையிடாத சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது. அதனால் பாதியில் அங்கிருந்து வெளியேறினோம். 

கிரண் பேடிக்கு நிர்வாகம் தெரியவில்லை. நடைமுறையில் இல்லாததை செய்யக்கூடாது, தன்னிச்சையாக தான் நினைப்பதை செய்வதை ஏற்க முடியாது. ஒரு அதிகாரிக்கு பாராட்டுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் முறையான நடவடிக்கையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறுகிறார்.

எனவே நாங்கள் தேநீர் விருந்தில் இருந்து வெளியேறியதை விட, அமைச்சரவைக்கு தெரியாமல் தேநீர் விருந்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முயன்றதற்கு கிரண் பேடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com