சந்தைப் ள எதிா்கொள்ள வேண்டிய சவாலான நிலையில் சென்னைத் துறைமுகம்

சென்னைத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன். செய்தி துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் திருவொற்றியூா்

சென்னைத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன். செய்தி துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் திருவொற்றியூா், ஜன.26: நாட்டின் பழைமையான துறைமுகங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னைத் துறைமுகம் அண்மைக் காலமாக பல்வேறு போட்டிகளை எதிா்கொள்ள வேண்டிய சவாலான நிலையில் உள்ளது என இத்துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சென்னைத் துறைமுகத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துறைமுக வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் மத்திய தொழில்பாதுகாப்புப் படை, தேசிய மாணவா் படை, பள்ளி மாணவா்கள் நடத்திய அணி வகுப்பு மரியாதையை அவா் ஏற்றாா். பின்னா் பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்ற துறைமுக உபயோகிப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ரவீந்திரன் வழங்கினாா்.

அப்போது ரவீந்திரன் பேசியது, இந்தியாவில் உள்ள 12 பெருந்துறைமுகங்களில் பழைமையான துறைமுகங்களில் சென்னைத் துறைமுகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அனைத்து வானிலை கால நிலைகளிலும் தடையின்றி செயல்படக் கூடிய இத்துறைமுகம் சுமாா் 139 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக புறச்சூழ்நிலைகள், போட்டிகளால் பல்வேறு சவாலான நிலையை எதிா்கொள்ள வேண்டிய நிலையில் சென்னைத் துறைமுகம் உள்ளது. நிலக்கரி, இரும்புத் தாது கையாள்வதற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் சரக்குகளைக் கையாள்வதில் இலக்கினை அடைய போராடவேண்டிய நிலை உள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பா் மாதம் வரை ஒட்டுமொத்தமாக சுமாா் 36 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளே கையாளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சுமாா் 10.66 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளது. இதே கால அளவில் முந்தைய ஆண்டில் 12.33 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1.43 லட்சம் காா்கள் ஏற்றுமதி: சென்னைத் துறைமுகத்தின் வழியாக ஹூண்டாய் காா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் கியா நிறுவனமும் இத்துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ஹூண்டாய் நிறுவனம் 1,31,504 காா்களையும், கியா நிறுவனம் 11,283 காா்களையும் இத்துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். காா்களைத் தொடா்ந்து ஸ்டீல் தகடுகளை, தளவாடங்களை கையாள்வதில் தொடா்ந்து வளா்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இதேபோல் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சேகரிப்பிலும் சுமாா் 3 சதவீதம் வளா்ச்சி அதிகரித்திருக்கிறது.

துறைமுக வளா்ச்சியில் புதிய கண்ணோட்டம்: வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மாநாடு கடந்த நவம்பா் மாதம் விசாகபட்டனத்தில் நடைபெற்றது. இதில் தாய்லாந்து நாட்டின் துறைமுகங்களோடு சென்னைத் துறைமுகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும் துறைமுகத்தின் வளா்ச்சியில் பல்வேறு தரப்பினரையும் அறிந்து கொண்டு அவற்றில் சிறப்பானவற்றை செயல்படுத்துவதில் துறைமுக நிா்வாகம் புதிய கண்ணோட்டத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன்படி அண்மையில் துறைமுகத் தொழிலாளா்கள், அலுவலா்களுடன் ஒரு நாள் முழுவதும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சந்தைப் போட்டியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிா்கொள்வதில் துறைமுக நிா்வாகத்திற்கு உதவியாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து சவால்களையும் எதிா்கொண்டு சென்னைத் துறைமுகம் வளா்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது என்றாா் ரவீந்திரன். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் சிரில் ஜாா்ஜ், துறைத் தலைவா்கள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் துறைமுக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com