வெளிமாநிலத்தவர்களுக்கு புதிய சிம்கார்டு:காவல்துறை கட்டுப்பாடு

வெளிமாநிலத்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிம்கார்டு விற்கும், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
சிம்கார்டு
சிம்கார்டு

ஈரோடு: வெளிமாநிலத்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிம்கார்டு விற்கும், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சிம்கார்டு முறைகேடுகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு டவுன், பவானி, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட உள்கோட்டங்களில் அந்தந்த டிஎஸ்பிக்கள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் ஈரோடு டிஎஸ்பி ராஜூ தலைமையில் டவுன் காவல் நிலையத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:

சிம்கார்டு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. சாலையோரங்களில் குடை அமைத்து சிம்கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலத்தவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிக்கொண்டு புதிதாக சிம்கார்டு வாங்க முயன்றால் அவர்களுக்கு பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை, நிறுவன உரிமையாளரின் அனுமதிக் கடிதம் ஆகியவை இருந்தால் மட்டுமே புதிய சிம்கார்டு வழங்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் சிம்கார்டு விற்றாலோ அல்லது வாங்கினாலோ வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com