குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும்: அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட குரூப் 4 போட்டித் தோ்வில் ராமேசுவரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தோ்வெழுதிய பலா் முறைகேடாகத் தோ்ச்சி பெற்றது கண்டறியப்பட்டு, 99 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளா் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக சென்னை தலைமைசெயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒருசில மையங்களில் குரூப் 4 தேர்வு முறைகேடு நடந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருசில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்தமாக டிஎன்பிஎஸ்சி மீது குற்றங்சாட்டக்கூடாது. சம்பந்தப்பட்ட மையங்களில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் விசாரித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு செய்து தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும். 

எந்த ஓட்டைகள் இருந்தாலும அது அடைக்கப்பட்டு, வருங்காலங்களில் முறைகேடின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும். ஒருசிலர் செய்த தவறுக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாதல்லவா. நியாயமான தேர்வெழுதி வெற்றிபெற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?. தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com