கரோனா உதவி மையம் மூலம் 1.4 லட்சம் பேருக்கு பயன்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தகவல்

 கரோனா உதவி மைய கட்டுப்பாட்டு அறையின் மூலமாக இதுவரை 1.47 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
கரோனா உதவி மையம் மூலம் 1.4 லட்சம் பேருக்கு பயன்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தகவல்

சென்னை: கரோனா உதவி மைய கட்டுப்பாட்டு அறையின் மூலமாக இதுவரை 1.47 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு சிறப்புற மேற்கொண்டு வருகிறது. அதன் ஓா் அங்கமாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழியில் உரையாடும் சுகாதார ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்கி வருகின்றனா்.

அந்த கட்டுப்பாட்டு அறையின் கீழ், 10 பிரிவுகள் இயங்கி வருகின்றன.இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1.47 லட்சம் தொலைபேசி அழைப்புகள் கையாளப்பட்டு பொதுமக்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மன நல ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். பிற ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-29510400 / 044-29510500 / 044-29510300 / 044-46274446, கைபேசி :9444340496 / 8754448477 ஆகியவற்றை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com