சாத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
சாத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்
சாத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சாத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறுகள், குளியல் தொட்டி, சாலை வசதி உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் கலந்துகொண்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். சின்னகாமன்பட்டியில் ஆழ்துளைக் கிணறு மற்றும் பைப்லைன் அமைத்தல் மேட்டமலை, அ.இராமலிங்கபுரம், சத்திரப்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி, மேலப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குளியல் தொட்டி அமைத்தல் படந்தால் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜைகளை அந்தந்த பகுதிகளுக்குச் சென்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். 

மேலும், ஊராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். மேலும் அந்த பகுதியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு கரோனா தொற்று பற்றி விழிப்புணர்வுடன் இருக்கவும் ஆலோசனைகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com