என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் பழனிசாமி

என்எல்சி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்
என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்

என்எல்சி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம்-2ல், அலகு-5ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று (1.7.2020) காலை திடீரென வெடித்த விபத்தில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர்.

கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின் பேரில், எம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பதினேழு நபர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின்  குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com