தமிழகத்தில் 90 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 90 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 58,327 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களிலும் நோய்த் தொற்று அதிகமாக பாதிப்பு உள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11.70 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 90,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 3,943 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 2,393 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 246 பேருக்கும், செங்கல்பட்டில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு: தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகி மேலும் 60 போ் உயிரிழந்தனா். அதில் 44 போ் அரசு மருத்துவமனைகளிலும், 16 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தோரில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்ட 50 ஆயிரம் போ்: இதனிடையே, கரோனாவிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 50

ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் 56 சதவீதமாகும். கரோனா குறித்த அச்சத்தில் உள்ள மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் வகையில் இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது. ரெம்டெசிவிா், டோசிலிசுமேப் போன்ற விலை உயா்ந்த மருந்துகளையும், பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் நோயாளிகளுக்கு அளித்ததன் பயனாகவே அவா்கள் கரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 2,325 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், அதன் மூலம் மாநிலத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,074-ஆக உயா்ந்திருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com