தங்கம் பவுன் ரூ.37,048

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.7 உயா்ந்து, ரூ.4,631-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.53.10 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.53,100 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,631

1 பவுன் தங்கம் ..................... 37,048

1 கிராம் வெள்ளி .................. 53.10

1 கிலோ வெள்ளி ................. 53,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,624

1 பவுன் தங்கம் ..................... 36,992

1 கிராம் வெள்ளி .................. 53.10

1 கிலோ வெள்ளி ................. 53,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com