நாமக்கல்: சிகிச்சையில் இருந்து தப்பியோடிய கரோனா நோயாளி மீது வழக்கு

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பொறியாளர் ஒருவர் புதன்கிழமை அதிகாலை தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நாமக்கல்: சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளி தப்பியோட்டம் 
நாமக்கல்: சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளி தப்பியோட்டம் 

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பொறியாளர் தப்பியோடிய நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய சுகாதாரத்துறையினர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதித்தனர். அதே சமயம், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து காணப்பட்ட கரோனா தீநுண்மி தொற்று, தற்போது பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருபவர்களால் இத்தொற்று வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வோர் மாவட்டத்திலும் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதுவரை 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அண்மையில் வளையப்பட்டி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டபோது சென்னையிலிருந்து வந்த ஒருவர் பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை வெளியான பாதிப்பு பட்டியலில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம்  பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் சாகர் நகரை சேர்ந்த அந்த 30 வயதுடைய பொறியாளர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மருத்துவமனை ஊழியர்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார். நாமக்கல் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தப்பியோடிய பொறியாளரை தேடி வருகின்றனர். பொத்தனூரில் உள்ள அவரது வீட்டுக்கு வருவார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொத்தனூர் வீட்டிற்கு அந்தப் பொறியாளர் காலை 8 மணியளவில் வந்த நிலையில் அவரிடம் சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். அரசு மருத்துவமனையி போதிய சுகாதார வசதி இல்லாததால் வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்தார். இதற்கு சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி வந்ததாக அவர்மீது பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக எஸ்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com