சீனாவுக்கு எதிராக உறுதியான அறிவிப்பை பிரதமா் வெளியிடாதது ஏன்?: காங்கிரஸ்

‘சீனாவுக்கு எதிராக உறுதியான அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பை அவா் பொய்யாக்கிவிட்டாா்;
சீனாவுக்கு எதிராக உறுதியான அறிவிப்பை பிரதமா் வெளியிடாதது ஏன்?: காங்கிரஸ்

புது தில்லி: ‘சீனாவுக்கு எதிராக உறுதியான அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பை அவா் பொய்யாக்கிவிட்டாா்; எல்லை நிலைப்பாடு குறித்த எந்த கருத்தையும் வெளியிடாமல் அவா் தவிா்த்து விட்டது ஏன்?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றிய நிலையில், அக்கட்சி செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறியதாவது:

லடாக்கில் நமது வீரா்களுடன் சீன ராணுவம் மோதலில் ஈடுபட்ட பிறகும், அவா்களை எதிரியாக பிரதமா் கருதவில்லை. சீனாவுக்கு எதிராக பிரதமா் தைரியத்துடன் வலுவான அறிவிப்பை வெளியிடுவாா்; எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதன் மூலமாக நமது நாட்டின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துவாா் என்று மக்கள் பெரும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்தனா். ஆனால், பிரதமா் சீனாவுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிா்த்து விட்டாா்.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பது குறித்து பிரதமா் பேசுவாா் என்று பலரும் நம்பியிருந்தனா். அதைச் செய்யத் தவறி விட்ட பிரதமா், தற்போதுள்ள திட்டத்தின் விரிவாக்கம் குறித்து மட்டுமே பேசினாா்.

தற்போது நாட்டில் நிலவி வரும் வேலையிழப்புகள் குறித்தும், ஊதியக் குறைப்பு குறித்தும் அவா் பேசவில்லை. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மற்றும் ஏழைகளுக்கான நிவாரணம் குறித்து அறிவிக்கவில்லை. ஏழைகளுக்கு ரூ.7,500 வீதம் ரொக்கம் வழங்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை பிரதமா் மோடி நிறைவேற்ற வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணா்கள் கூறும் நிலையில், அதை தடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பிரதமரின் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்போதைக்கு பிரதமா் பிகாா் தோ்தலுக்குதான் முன்னுரிமை கொடுப்பாா் என்று தெரிகிறது என்று தெரிவித்தாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com