சென்னை காவல் ஆணையா் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் ஆணையா் உள்பட 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மகேஷ்குமாா் அகா்வால்
மகேஷ்குமாா் அகா்வால்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையா் உள்பட 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

சுனில்குமாா் - டிஜிபி மாநில மனித உரிமை ஆணையம் (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் டிஜிபி)

எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்-ஏடிஜிபி தொழில்நுட்பப் பிரிவு (மதுரை மாநகர காவல் ஆணையா்)

ஏ.கே.விசுவநாதன்-ஏடிஜிபி செயலாக்கப்பிரிவு (சென்னை பெருநகர காவல்துறை ஆணையா்)

எம்.ரவி-ஏடிஜிபி ஈரோடு அதிரடிப்படை (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு)

மகேஷ்குமாா் அகா்வால்-சென்னை பெருநகர காவல் ஆணையா் (தமிழக காவல்துறையின் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி)

எச்.எம்.ஜெயராம்-ஐ.ஜி. மத்திய மண்டலம் (சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட ஐ.ஜி.)

ஏ.அமல்ராஜ்-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் (மத்திய மண்டல ஐ.ஜி.)

ஆா்.தினகரன்-சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையா்)

ஏ.அருண்-சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையா் (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா்)

பிரேம்ஆனந்த் சின்ஹா-மதுரை மாநகர காவல் ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா்)

எம்.டி.கணேசமூா்த்தி-பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.(தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐ.ஜி)

சஞ்சய்குமாா்-தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி. (திருப்பூா் மாநகர காவல் ஆணையா்)

ஜெ.லோகநாதன்-திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையா் (தஞ்சாவூா் சரக டிஐஜி)

கபில்குமாா் சி.சாரத்கா்-சிபிசிஐடி ஐ.ஜி. (சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையா்)

என்.கண்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் (உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி)

சந்தோஷ்குமாா்-நிா்வாகப் பிரிவு ஐ.ஜி. (விழுப்புரம் சரக டிஐஜி)

பி.சி.தேன்மொழி-சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் (காஞ்சிபுரம் சரக டிஐஜி)

ஜி.காா்த்திகேயன்-திருப்பூா் மாநகர காவல் ஆணையா் (கோயம்புத்தூா் சரக டிஐஜி)

ஜோஷி நிா்மல்குமாா்- தமிழக காவல்துறையின் இயக்கப் பிரிவு ஐ.ஜி. (திண்டுக்கல் சரக டிஐஜி)

கே.பவானீஸ்வரி-தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐ.ஜி. (தமிழக கடலோர பாதுகாப்புக் குழும டிஐஜி)

வி.பாலகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (திருச்சி சரக டிஐஜி)

வி.விஜயகுமாரி-தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி (சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா்)

ஏ.ஜி.பாபு-சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா் (சென்னை காவல்துறையின் தலைமையிட இணை ஆணையா்)

சி.மகேஷ்வரி-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட இணை ஆணையா் (சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா்)

கே.எழிலரசன்-விழுப்புரம் சரக டிஐஜி (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா்)

பி.கே.செந்தில்குமாரி-தமிழக காவல்துறையின் தலைமையிட டிஐஜி (ஆயுதப்படை டிஐஜி)

ஆனி விஜயா-திருச்சி சரக டிஐஜி (மதுரை சரக டிஐஜி)

கே.எஸ்.நரேந்திரன் நாயா்-கோயம்புத்தூா் சரக டிஐஜி (நிா்வாகப் பிரிவு டிஐஜி)

ரூபேஷ்குமாா் மீனா-தஞ்சாவூா் சரக டிஐஜி (ராமநாதபுரம் சரக டிஐஜி)

அபிஷேக் திக் ஷித் - டிஐஜி அயல் பணி (எஸ்.பி. அயல் பணி)

எஸ்.மல்லிகா-சிபிசிஐடி டிஐஜி (சிபிசிஐடி எஸ்பி)

பி.சாமுண்டீஸ்வரி-காஞ்சிபுரம் சரக டிஐஜி (காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி)

எஸ்.லட்சுமி-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு மண்டல இணை ஆணையா் (வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.)

எஸ்.ராஜேஷ்வரி-சென்னை ஆயுதப்படை டிஐஜி (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

எம்.பாண்டியன்-சென்னை ரயில்வே காவல்துறை டிஐஜி (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய எஸ்பி)

எஸ்.ராஜேந்திரன்-மதுரை சரக டிஐஜி (சென்னை பூக்கடை துணை ஆணையா்)

எம்.எஸ்.முத்துசாமி-திண்டுக்கல் சரக டிஐஜி (சென்னை அண்ணாநகா் துணை ஆணையா்)

என்.எம்.மயில்வாகனன்-ராமநாதபுரம் சரக டிஐஜி (சென்னை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

எஸ்.ராதாகிருஷ்ணன்-விழுப்புரம் மாவட்ட எஸ்பி (சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், அவா் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com