பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினா் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினா் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொதுமுடக்கம் காரணமாக எரிபொருள் தேவை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தி வருகின்றன. சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 29) நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டா் ஒரு லிட்டா் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த விலை உயா்வை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு சாா்பில் சென்னை உயா் நீதிமன்றம் எதிரே, மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளா் என். அருள் பத்தைய்யா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளா் ஆா்.சுதா உள்ளிட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் - டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com