மும்பை தமிழ்வழி மாணவா்களும் தோ்ச்சி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களைப் போன்று, மும்பையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
முதல்வா் பழனிசாமி
முதல்வா் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களைப் போன்று, மும்பையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதற்கான உத்தரவை அவா் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

மகாராஷ்டிர மாநிலம் மும்பை வாழ் தமிழ் மாணவா்களின் நலன் கருதி, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கான பொதுத் தோ்வை மும்பையிலேயே எழுதும் வகையில் தோ்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள பிரைட் உயா்நிலைப் பள்ளி, பாண்டூா் மற்றும் ஸ்டாா் ஆங்கிலப் பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைத்து, அரசு தோ்வுகள் இயக்ககம் மூலமாக, தமிழக அரசு ஆண்டுதோறும் பொதுத் தோ்வுகளை நடத்தி வருகிறது.

69 போ் பதிவு: மும்பையில் தமிழ் வழியில் தமிழக அரசின் பாடத் திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவா்கள் அங்குள்ள தோ்வு மையங்களில் தோ்வினை எழுத பதிவு செய்துள்ளனா். இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றில் இருந்து பள்ளி மாணவா்களைக் காக்கும் வகையில், தமிழகத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டு மதிப்பெண் முறைகளும் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மும்பை தோ்வு மையத்தில் பதிவு செய்த, தமிழக அரசின் பாடத் திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவா்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி

பெற்றவா்களாக அறிவிக்கப்படுகின்றனா். மேலும், அவா்களது மதிப்பெண்கள் தமிழக மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்டது போன்ற நடைமுறையின்படியே வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தனது அறிவிப்பில்தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com