ஈரோடு காய்கறி மார்க்கெட் கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா புதிய காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு காய்கறி மார்க்கெட் கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா புதிய காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு ஆர்கேவி ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் போதிய இடவசதி இன்றியும், மிகுந்த நெருக்கத்துடன் செயல்பட்டு வந்தது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. ஊரடங்குக்கு பின்னும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டினை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து அங்கு 800 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான டோக்கன் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் காய்கறி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடந்தது. கடை ஒதுக்கீட்டின் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

குலுக்கல் முறைக்கு வியாபாரிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மண்டபத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். குலுக்கல் தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய கடை எண் தெரிவிக்கப்பட்டது. இந்த அனைத்து நிகழ்வுகளும் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. விரைவில் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கறி மார்க்கெட் மாற்றப்படும் என அதிகாரிகளும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com