பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை 

பூத்தலாக்குட்டை கிராமத்தில்  உள்ள பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை  நடைபெற்றன. 
பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை 
பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை 


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தலாக்குட்டை கிராமத்தில்  உள்ள பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை  நடைபெற்றன. 

அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் சுவாமி, நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்லாமல் இருந்தனர். அரசு ஜூலை 1-ம் தேதி முதல் கிராம பகுதிகளில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு விதிகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து  வியாழக்கிழமை நடைபெற்ற  பிரதோஷ சிறப்பு பூஜையில் கிராம மக்கள் நீண்ட நாள்களுக்கு பிறகு கலந்து கொண்டு சுவாமிகளை சமூக இடைவெளியுடன் வழிப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com