தங்கம் பவுன் ரூ.36,976

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் (பவுன் ரூ.36,976) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது.
தங்கம் பவுன் ரூ.36,976

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் (பவுன் ரூ.36,976) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, கடந்த புதன்கிழமை அன்று பவுன் தங்கம் ரூ.37,472 ஆக உயா்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.அதன்பிறகு, விலை குறைந்து, பவுன் தங்கம் ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.36,976 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,622 ஆகவும் இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.53.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.53,400 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,622

1 பவுன் தங்கம் ..................... 36,976

1 கிராம் வெள்ளி .................. 53.40

1 கிலோ வெள்ளி ................. 53,400

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,622

1 பவுன் தங்கம் ..................... 36,976

1 கிராம் வெள்ளி .................. 52.90

1 கிலோ வெள்ளி ................. 52,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com