கம்பம் அருகே  சாலை ஆக்கிரமிப்பை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை

கம்பம் அருகே சுருளிப்பட்டி யானைக் கஜம் செல்லும் ஊரக நெடுஞ்சாலை, ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுருளி ப்பட்டி யானைக்கஜம் சாலை ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்ட அனைத்து சமுதாய மக்கள்.
சுருளி ப்பட்டி யானைக்கஜம் சாலை ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்ட அனைத்து சமுதாய மக்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி யானைக் கஜம் செல்லும் ஊரக நெடுஞ்சாலை, ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளிப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் அருகே யானைக் கஜம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் வாழை, தென்னை, திராட்சை, மற்றும் காய்கனி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலங்களில் விளையும் விளை பொருட்கள் யானை கஜம் சாலை வழியாக சுருளிப்பட்டிக்கு வந்து அங்கிருந்து கம்பம், தேனி உள்ளிட்ட வெளியூர் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

தற்போது யானைக்கஜம் சாலை மலை அடிவாரத்தை அடைய 20 மீட்டர் தொலைவு உள்ளது. இதைத் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து எனக்குச் சொந்தமான இடம், யாரும் நடக்கக் கூடாது என்று தகராறு செய்து வருகிறார். இது தொடர்பாக சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து சமுதாய கூட்டம் நடைபெற்றது. கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பழனி மணி கணேசன் தலைமை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ். முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் யானக்கஜம் சாலை 20 மீட்டர் தொலைவை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டுப்போன பகுதியில் ஊரக நெடுஞ்சாலைத்துறை தார் சாலை அமைக்க வேண்டும்.

சுருளிப்பட்டியிலிருந்து ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு நேரடியாக யானைக்கஜம் வழியாக செல்ல வனப் பகுதியில் சாலை அமைத்து, ஹைவேவிஸ் உள்பட ஏழு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுருளிப்பட்டி வழியாக போக்குவரத்தைத் தொடங்க வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக முதல்வர், துணை முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தமபாளையம் கோட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்கு தீர்மானங்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com