கரோனா: கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், சுகாதார நிலையம் சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.
கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் மருத்துவர், செவிலியர் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் ஆரம்ப சுகாரார நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது. இதனால், கூடலூர், லோயர்கேம்ப், வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

இது பற்றி மருத்துவ அலுவலர் பி. முருகன் கூறுகையில், 

தொற்று ஏற்பட்டதால், சுகாதார நிலையம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்படும், சுகாதார நிலைய வளாகப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை திறக்கப்பட்டு, சுகாதார நிலைய பணியாளர் அனைவருக்கும் மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com