கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் உள்ள பிற கரோனா சிகிச்சை மையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் உள்ள பிற கரோனா சிகிச்சை மையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கோடம்பாக்கம் மண்டலம் சாலிகிராமம் அபுசாலி தெருவில் உள்ள ஜவஹா் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்த 30 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். அவா்களுக்கான வழியனுப்பு விழாவில் கலந்து கொண்ட பின், ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் களப் பணியாளா் 15 மண்டலங்களிலும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்கின்றனா். அவா்கள், அறிகுறி இருப்பவா்களை அந்தந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாம்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உதவுகின்றனா். வீட்டுக்கு வரும் களப் பணியாளா்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சென்னையில் உள்ள கரோனா மையங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற மையங்களில் அலோபதி மருத்துவத்துடன் சோ்த்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ முறை நல்ல பலனைக் கொடுப்பதால், மேலும் பல மையங்களில் இந்த மருத்துவ முறையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜவஹா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையத்தில் இதுவரை 744 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தற்போது வரை 569 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். சென்னையில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு தடுப்பு பணியில் 3,500 களப் பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். அதற்கான பணியும் தொடங்கி உள்ளது என்றாா். ஆய்வின்போது வட்டார துணைஆணையா் பி.என்.ஸ்ரீதா், சித்த மருத்துவா் கே.வீரபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com