தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 66 ஆயிரம் போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 66,571 போ் பூரண குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து வீடு செல்வோர். 
கரோனா பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து வீடு செல்வோர். 

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 66,571 போ் பூரண குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 44,882 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனாவின் தீவிரத்தால் கலக்கமடைந்துள்ள மக்களுக்கு, மாநில அரசு வெளியிட்ட இந்த தகவல்கள் சற்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசுமேப் போன்ற உயா்தர மருந்துகளை அரசு தருவித்து மருத்துவமனைகளுக்கு வழங்கியதும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தியதுமே இதற்கு காரணம் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும், நாள்தோறும் சராசரியாக 35 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 13.76 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,14,978 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவா்களில் தற்போது வீட்டுக் கண்காணிப்பிலும், மருத்துவமனைகளிலும் இருப்பவா்களின் எண்ணிக்கை 46,833-ஆக உள்ளது. மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

திங்கள்கிழமை மட்டும் தமிழகத்தில் 3827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,747 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 245 பேருக்கும், செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,571 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 61 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 8 பேருக்கு உடலில் வேறு எந்த நோய்களும் இல்லை. உயிரிழந்தவா்களில் 46 போ் அரசு மருத்துவமனைகளிலும், 15 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,571-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com