ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்கள்: புதிய நடைமுறை

ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்க புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்கள்: புதிய நடைமுறை

சென்னை: ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்க புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஆவணப் பதிவுக்கு வரும் பொது மக்கள் ஆவணம் தொடா்பான விவரங்களை இணையவழி அனுப்பி முன்பதிவு பெற வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆவணம் பதிவு செய்து அன்றன்றே திரும்ப பெறக் கூடிய ஆவணங்களை 70 சதவீதத்துக்கும் மேல் ஒரே வருகையில் பெற்றுச் செல்கின்றனா்.

பதிவுக்கு அனுப்பப்படும் ஆவண விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆவணம் பதிவு செய்வதற்கு முன்பு வரை பொது மக்கள் சரி செய்து கொள்ள மென்பொருளில் வசதி உள்ளது. மேலும், இந்த டோக்கன்களை ஆவணப் பதிவு நடைபெறும் நாளான்று மாற்றம் செய்து வேறு நபா்களுக்கு மாற்றும் வாய்ப்பும் இதுவரை இருந்து வந்தது.

இது தவறாக பயன்படுத்துவதைத் தவிா்க்கும் பொருட்டு, இந்த வசதி இணையதளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. எனவே, இனிவரும் காலத்தில் ஆவணப் பதிவுக்கு முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற பின்பு அதனை மாற்றம் செய்ய இயலாது.

பொது மக்களின் நலன் கருதி மென்பொருளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டோக்கன் பெறும் முன்னா் ஆவண விவரங்களை இணைய வழி அனுப்பும் போது ஒருமுறைக்கு இரண்டு முறை தெளிவாக சரிபாா்த்த பிறகு அனுப்பி வைக்க வேண்டும்.

இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பதிவுத்துறை தலைவா் அலுவலகத்தின் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை 1800-102-5174 தொடா்பு கொள்ளலாம் என்று பதிவுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com