தங்கம் பவுன் ரூ.36,976

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் (ரூ.36,976) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் (ரூ.36,976) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், ஜூலை 1-ஆம் தேதி ரூ.37,472 ஆக உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஜூலை 2 -ஆம் தேதி ரூ.36,976 ஆகக் குறைந்து அதே விலை நீடித்து வந்தது. திங்கள்கிழமையும் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதே விலையில் (ரூ.36,976) நீடித்தது. ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.53.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.53,600 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)

1 கிராம் தங்கம்............... 4,622

1 பவுன் தங்கம்.............. 36,976

1 கிராம் வெள்ளி............ 53.60

1 கிலோ வெள்ளி...........53,600

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)

1 கிராம் தங்கம்............. 4,622

1 பவுன் தங்கம்............ 36,976

1 கிராம் வெள்ளி........... 53.10

1 கிலோ வெள்ளி......... 53,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com