இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்கு இடைக்​கா​லத் தடை விதிக்க உயர்​நீ​தி​மன்​றம் மறுப்பு

இ​ணை​ய​வழி வகுப்​பு​களை ஒழுங்​கு​ப​டுத்​து​வது தொடர்​பாக வழி​காட்டு நெறி​மு​றை​களை மத்​திய அரசு வரு​கிற 15-ஆம் தேதிக்​குள் வெளி​யிட உள்​ள​தா​கத் தெரி​வித்​த​தைத் தொடர்ந்து, இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்​க
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


​சென்னை: ​இ​ணை​ய​வழி வகுப்​பு​களை ஒழுங்​கு​ப​டுத்​து​வது தொடர்​பாக வழி​காட்டு நெறி​மு​றை​களை மத்​திய அரசு வரு​கிற 15-ஆம் தேதிக்​குள் வெளி​யிட உள்​ள​தா​கத் தெரி​வித்​த​தைத் தொடர்ந்து, இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்​குத் இடைக்​காலத் தடை விதிக்க உயர்​நீ​தி​மன்​றம் மறுத்து விட்டது.

சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் புத்​த​க​ரம் பகு​தி​யைச் சேர்ந்த சரண்யா தாக்​கல் செய்த மனு​வில், கரோனா நோய்த் தொற்​றுப் பர​வல் கார​ண​மாக நாடு முழு​வ​தும் பொது முடக்​கம் அமல்​ப​டுத்​தப்​பட்டு, பள்ளி, கல்​லூரி உள்​ளிட்ட கல்வி நிறு​வ​னங்​கள் திறக்​கத் தடை விதிக்​கப்​பட்​டது. இத​னால், நிகழ் கல்​வி​யாண்​டுக்​கான பாடங்​கள் இணை​ய​வ​ழி​யில் நடத்​தப்​ப​டு​கின்​றன.

இந்த வகுப்​பு​க​ளில் கலந்து கொள்ள மாணவ, மாண​வி​கள் முயற்​சிக்​கும் போது ஆபாச இணை​ய​த​ளங்​க​ளால் அவர்​க​ளுக்​குக் கவ​னச் சித​றல் ஏற்​ப​டு​கி​றது. எனவே, முறை​யான விதி​களை வகுக்​கும் வரை இணை​ய​வ​ழி​யில் வகுப்​பு​களை நடத்​தத் தடை விதிக்க வேண்​டும் என கோரி​யி​ருந்​தார். இணை​ய​வழி வகுப்​பு​க​ளில் செல்​லி​டப்​பேசி, மடிக் கணினி வாயி​லாக பங்​கேற்​ப​தால், மாண​வர்​க​ளின் கண்​க​ளுக்​குப் பாதிப்பு ஏற்​ப​டு​வ​தா​க​வும், அத​னால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்கு தடை விதிக்க வேண்​டும் என​வும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை​யி​லான மாண​வர்​க​ளுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்​பு​கள் நடத்த உத்​த​ர​விட வேண்​டும் என வலி​யு​றுத்தி, விமல்​மோ​கன் வழக்கு தொடுத்​தி​ருந்​தார். இந்த வழக்​கில் மாண​வர்​க​ளுக்​குக்  கண் பாதிப்பு ஏற்​ப​டுமா? என்​பது குறித்து அரசு கண் மருத்​து​வ​மனை தலை​வர் அறிக்கை அளிக்க ஏற்​கெ​னவே நீதி​ப​தி​கள் உத்​த​ர​விட்​டி​ருந்​த​னர்.

இந்த வழக்கை நீதி​ப​தி​கள் எம்.​எம்.​சுந்​த​ரேஷ், ஆர்.​ஹே​ம​லதா ஆகி​யோர் திங்​கள்​கி​ழமை காணொ​லிக் காட்சி மூலம் விசா​ரித்​த​னர். அப்​போது, மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜ​ரான மூத்த வழக்​கு​ரை​ஞர் பிர​பா​க​ரன், வழக்​கு​ரை​ஞர் ஜே. ர​வீந்​தி​ரன் ஆகி​யோர், இந்த வழக்​கில் உயர்​நீ​தி​மன்​றம் ஏற்​க​னவே பிறப்​பித்த உத்​த​ர​வின்​படி அரசு கண் மருத்​து​வ​மனை தலை​வர் இது​வரை எந்​த​வொரு அறிக்​கை​யும் தாக்​கல் செய்​ய​வில்லை எனத் தெரி​வித்​த​னர்.

மத்​திய அரசு தரப்​பில் ஆஜ​ரான கூடு​தல் சொலி​சிட்​டர் ஜென​ரல் ஆர். சங்​க​ர​நா​ரா​ய​ணன், இணை​ய​வழி வகுப்​பு​களை ஒழுங்​கு​ப​டுத்​து​வது தொடர்​பாக வழி​காட்டு நெறி​மு​றை​களை மத்​திய அரசு வரு​கிற 15-ஆம் தேதிக்​குள்  வெளி​யிட  உள்​ளது. அத​னால், விசா​ர​ணையை ஒத்​தி​வைக்க வேண்​டும் எனக் கேட்டுக் கொண்​டார். இதை​ய​டுத்து, விசா​ர​ணையை வரும் ஜூலை 20-ஆம் தேதிக்கு நீதி​ப​தி​கள் ஒத்​தி​வைத்து உத்​த​ர​விட்​ட​னர். அப்​போது, மனு​தா​ரர்​கள் தரப்​பில், அது​வரை இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்​குத் தடை விதிக்க வேண்​டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டது. ஆனால்  நீதி​ப​தி​கள் இணை​ய​வழி வகுப்​பு​க​ளுக்​குத் இடைக்​கா​லத் தடை விதிக்க  ம​றுத்​து​விட்​ட​னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com