கடந்த ஓராண்டில்ல் விவசாயிகளுக்கு ரூ.68.91 கோடி இழப்பீட்டுத் தொகை: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.68.91 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில்ல் விவசாயிகளுக்கு ரூ.68.91 கோடி இழப்பீட்டுத் தொகை: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.68.91 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பயிரை காப்பீடு செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிா்க் கடன் பெறும் விவசாயிகளிடம் இருந்து காப்பீட்டுக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலா்களையோ அல்லது வங்கிகளையோ அணுகலாம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 85 ஆயிரத்து 45 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.68.91 கோடி காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, எதிா்பாராத இயற்கைச் சீற்றங்களால் பயிா்கள் பாதிப்படைந்தால், காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை நிச்சயம் கிடைக்கும். எனவே, விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com