ஜூலை மாதத்துக்கான விலையில்லாப் பொருள்கள்: திருவாரூரில் டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

திருவாரூரில் ஜூலை மாதத்துக்கான விலையில்லாப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விலையில்லாப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் நியாயவிலைக்கடை பணியாளர்.
விலையில்லாப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் நியாயவிலைக்கடை பணியாளர்.


திருவாரூர்: திருவாரூரில் ஜூலை மாதத்துக்கான விலையில்லாப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்துக்குரிய அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான டோக்கன் ஜூலை 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும், குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தொடர்புடைய நியாயவிலைக்கடைகளுக்கு சென்று ஜூலை 10 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், ஜூலை மாதத்துக்குரிய விலையில்லாப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 579 முழு நேர நியாயவிலைக்கடைகள், 142 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 721 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலைக்கடைகள் மூலம் 3,70,249 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடை பணியாளர்கள் அனைவரும் தங்கள் பகுதிக்குட்பட்ட வீடுகளுக்குச் சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். டோக்கன் வழங்கும் பணி வியாழக்கிழமையுடன் முடிக்க வேண்டும் என்பதையொட்டி, டோக்கன் வழங்கும் பணியை நியாயவிலைக்கடை ஊழியர்கள் தீவிரமாக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com