திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்,7 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா

திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்,7 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா

திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 7 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருவோா் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். கரோனா தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் ஆயுதப்படை காவலா்கள் 2 போ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா் உள்பட 2 செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 614 ஆக உயா்ந்துள்ளது. இதில், 386 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், 228 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 7 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கூத்தாநல்லூர் வட்டத்தில், கமலாபுரம், வடபாதிமங்கலம் மற்றும் கூத்தாநல்லூர் என 3  பிர்க்காக்கள் உள்ளது. கூத்தாநல்லூர் வட்டத்தில், 55 கிராமங்கள் உள்ளன. இதில், 3 வருவாய் ஆய்வாளர்கள், 40 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், கடந்த 29 ஆம் தேதி முதல், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்படியான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து, வட்டாட்சியரிடம் கிராமக் கணக்குகளை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, கூத்தாநல்லூர் நகரத்தின் 29 வயது கிராம நிர்வாக அலுவலருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருடன், ஒரே அறையில் தங்கியிருந்த 6 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆனந்த் தலைமையில், மருத்துவக் குழுவினரால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவு இன்று வியாழக்கிழமை காலை தெரிய வந்தது. 

பரிசோதனையில், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மற்றும் சேகரை, வக்ராநல்லூர், 4ல் ஒன்று, புள்ளமங்கலம், கிளியனூர், பழையனூர் உள்ளிட்ட 6 கிராம நிர்வாக அலுவலர் என 7 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, நகராட்சி பொறுப்பு ஆணையரும், பொறியாளருமான ராஜகோபால் மற்றும் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கியிருந்த கம்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டன. 

இது குறித்து, சமூக ஆர்வலர் கூறியதததாவது: கூத்தாநல்லூர் வட்டாட்சியர் உள்பட 7 கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்தை வெளியில் உள்ள இரும்புக் கேட்டை மட்டும் பூட்டி விட்டு, அலுவலகம்  முழுமையாகப் பூட்டப்படாமல், உள்ளிருந்து, உள்பகுதியில் கரோனா தொற்றுப் பாதிப்பு இல்லாதவர்கள் பணியாற்றுகிறார்கள். இது ஆபத்தானது எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com