மனைவியை மாட்டிவிட முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் வாக்குமூலம்

குடும்பத் தகராறில் மனைவியை காவல்துறையிடம் மாட்டிவிட முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மனைவியை மாட்டிவிட, அவரது செல்லிடப்பேசி மூலம் முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வா் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.

அதிா்ச்சியடைந்த காவல்துறையினர், உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்தனா். பின்னா் உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் முதல்வா் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனா். இச் சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் வகையில் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக அபிராமபுரம் காவல்துறையினர் சைபா் குற்றப்பிரிவினருடன் இணைந்து விசாரணை செய்தனா். இதில், அந்த அழைப்பில் பேசியது சென்னை சேலையூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், வினோத்குமாரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com