தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழை: இளம் பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வாக உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால் இளம் பயிர்கள் மூழ்கின.
கத்திரிநத்தம் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.
கத்திரிநத்தம் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வாக உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால் இளம் பயிர்கள் மூழ்கின.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 84 மி.மீ. மழை பெய்தது. 

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வெட்டிக்காடு 84, வல்லம் 79, கும்பகோணம் 78, குருங்குளம் 74, ஒரத்தநாடு 63.6, மதுக்கூர் 59, பாபநாசம் 57, பூதலூர் 48.4, தஞ்சாவூர் 48, நெய்வாசல் தென்பாதி 38.6, திருவிடைமருதூர் 36, பட்டுக்கோட்டை 34.2, அணைக்கரை 28.4, அய்யம்பேட்டை 27, ஈச்சன்விடுதி 17.2, திருவையாறு 16, மஞ்சளாறு 14.4, அதிராம்பட்டினம் 13, திருக்காட்டுப்பள்ளி 7.6, கல்லணை 7.2, பேராவூரணி 6.6. 

மாவட்டத்தில் சராசரியாக 39.87 மி.மீ. மழையளவு பதிவாகியது. இதனால், மாவட்டத்தில் தாழ்வாகவும், வடிகால் வசதியில் பிரச்னையாகவும் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கத்திரி நத்தம், கோவிலூர் உள்ளிட்ட கிராமங்களில் இளம் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன்புதான் விவசாயிகள் குறுவை பயிரை நடவு செய்தனர். இன்னும் வேர் பிடிக்காத நிலையில் பலத்த மழையால் ஏராளமான பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தனியாரிடம் கடன் வாங்கி நடவு செய்யப்பட்ட நிலையில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com