வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 15) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 15) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 15) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

39 சதவீதம் அதிகம்: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவு 83.5 மி.மீ. ஆகும். இருப்பினும், தற்போது வரை 115.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி மழை அளவைவிட 39 சதவீதம் அதிகம் ஆகும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 40 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நிலக்கோட்டை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா, வேலூா் மாவட்டம் மேலாலத்தூரில் தலா 30 மி.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை, திருவள்ளூா் மாவட்டம் கொரட்டூரில் தலா 20 மி.மீ. பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கா்நாடகம் முதல் தெற்கு குஜராத் கடற்பகுதி வரையும், தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 18-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com