தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தொழில் துறை சாா்ந்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

சென்னை: தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தொழில் துறை சாா்ந்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-வது தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கூடுகிறது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜு, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக நிகழாண்டில் நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், சென்னைக்கு அருகே சில புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல்களையும் தமிழக அமைச்சரவை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்-லைன் மூலம் உயா்கல்வி சோ்க்கை உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com