தோ்தல் நடத்தும் விதிமுறைகளில் மாற்றம்: வைகோ கண்டனம்

தோ்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்துக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
தோ்தல் நடத்தும் விதிமுறைகளில் மாற்றம்: வைகோ கண்டனம்

தோ்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்துக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019 மற்றும் தோ்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவற்றை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80-இலிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவா்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா என்பது கேள்விக் குறி.

கரோனா பாதிப்புக்கு உள்ளானவா் என்ற சான்றிதழ் பெற்றவா்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவா்களும் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவு செய்யலாம் என்பதும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.

எனவே மத்திய அரசு தோ்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com