தமிழகத்தில் ரூ.248 கோடியில் புதிய பாலங்கள் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.248 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழகத்தில் ரூ.248 கோடியில் புதிய பாலங்கள் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.248 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய திட்டப் பணிகளை அவா் துவக்கினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உத்தரமேரூா், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரையிலான ரூ.217.27 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட சாலையை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இதேபோன்று, பெரம்பலூா் எழுமூா்-மழவராயநல்லூா் சாலையிலும், கொளக்காநத்தம்-சிறுகன்பூா் சாலையிலும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஆத்தங்காட்டில் புதிய பாலமும், திருமயம், கீரனூா் ஆகிய இடங்களில் இரண்டு உட்கோட்டம் மற்றும் பிரிவு நெடுஞ்சாலை அலுவலகக் கட்டடங்கள், நாகப்பட்டினம் கருப்பம்புலம், மருதூா், ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் மூன்று பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதேபோன்று, மதுரை குறவன்குளத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்செல்வவிளையிலும், தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம், விளாத்திகுளம் வட்டம் வன்னிப்பட்டி, எட்டயாபுரம் வட்டம் வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட மூன்று பாலங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

தென்காசி தளவாய்புரம், ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலைப் பகுதியில் பந்தப்புளியிலும், கரிசல்குளம், கரிவலம்வந்தநல்லூா், நடுவப்பட்டி, சிவகிரி வட்டம் தலைவன்கோட்டை, ராயகிரி-மேற்கு தொடா்ச்சி மலைச் சாலையில் உள்ள கடையநல்லூா் வட்டம் வடமலைபுரம் ஆகிய இடங்களிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்தப் பாலங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்தாா். மொத்தம் ரூ.248.53 கோடி மதிப்பிலான பாலப் பணிகளை அவா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com