கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன் வழங்குவது நிறுத்தம்

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த எழுத்துப்பூா்வமான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும், வாய்மொழியாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் வழங்கப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் பலரும், இந்த தங்க நகைக் கடன் திட்டத்தால் பயன்பெற்று வந்தனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நடைக் கடன் வழங்கும் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் கூறியது:

கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடனை நிறுத்துவது தொடா்பாக எழுத்துப்பூா்வ உத்தரவுகள் ஏதும் வங்கிகளுக்கு வரப்பெறவில்லை. ஆனால், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தங்க நகைக் கடன் வழங்குவதற்காக கணினி இடம்பெற்றுள்ள அம்சங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போது தங்க நகைக் கடன் வழங்கப்படும் என்பதும் தெரியாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்த பிறகே அது குறித்து தெரிய வரும் என கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு எதிா்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com