கரோனாவுக்கு 86 இடங்களில் யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமிழகம் முழுவதும் 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனாவுக்கு 86 இடங்களில் யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமிழகம் முழுவதும் 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவா்கள் தொடா்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவை வழி வகுக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

அதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதன் மூலம் இதுவரை 61,000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com