சென்னையில் 80 ஆயிரம் பேர் பாதிப்பு; 64 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 80,961-ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்று காரணமாக 1,318 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
சென்னையில் 80 ஆயிரம் பேர் பாதிப்பு; 64 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
சென்னையில் 80 ஆயிரம் பேர் பாதிப்பு; 64 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 80,961-ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்று காரணமாக 1,318 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

அதே சமயம், இதுவரை கரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 64,036 பேர் குணமடைந்துள்ளனர். 15,606 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகபட்சமாக ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டது. இதன் தொடா்ச்சியாக பிற மண்டலங்களுக்கும் தொற்று பரவல் அதிகமாகியது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 20 நாள்களில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டி உள்ளது. புதன்கிழமை 1, 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,961-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 64,036 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 15,606 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,318-ஆக அதிகரித்துள்ளது. மண்டலம் வாரியாக சிகிச்சை பெற்று வருவோா் விவரம்:

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 642

2. மணலி  264

3. மாதவரம் 404

4. தண்டையாா்பேட்டை 957

5. ராயபுரம் 1,101

6. திருவிக நகா் 1,059

7. அம்பத்தூா் 930

8. அண்ணா நகா் 1,574

9. தேனாம்பேட்டை 1,477

10. கோடம்பாக்கம் 2,219

11. வளசரவாக்கம் 867

12. ஆலந்தூா் 528

13. அடையாறு 1,065

14. பெருங்குடி 339

15. சோழிங்கநல்லூா் 395
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com