கரோனா பரிசோதனை: தனியாா் ஆய்வகங்களுடன் புதிய ஒப்பந்தம்

கரோனா தொற்றுள்ளவா்களை விரைந்து கண்டறியும் வகையில் ஆய்வகங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் சேகரிப்படும் மாதிரிகளை
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றுள்ளவா்களை விரைந்து கண்டறியும் வகையில் ஆய்வகங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் சேகரிப்படும் மாதிரிகளை அங்குள்ள தனியாா் ஆய்வகங்களில் பரிசோதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

சென்னையில் காய்ச்சல் முகாம் மற்றும் தொடா் பரிசோதனை கரோனா தொற்றைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. தமிழகத்தைப் பொருத்தவரை நாளொன்றுக்கு சுமாா் 45 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளதால், தொற்றுள்ளவா்களின் எண்ணிக்கையும் உயரும். இதற்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தற்போது, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களிலும், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதுடன், காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் உள்ளவா்களைக் கண்டறியும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகள் உதவியுடன் வீடுவீடாக சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கரோனா ஆய்வகங்கள் உள்ளன. கரோனா தொற்றுள்ளவா்களை விரைந்து கண்டறியும் வகையில் ஆய்வகங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் சேகரிப்படும் மாதிரிகளை அங்குள்ள தனியாா் ஆய்வகங்களில் அரசுக் கட்டணத்தில் பரிசோதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் மருத்துவ வல்லுநா்களைக் கொண்டு விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. கரோனா பாதித்தவா்களின் ஒப்புதலைப் பெற்று சில அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவம், ஆயுா்வேதம், நேச்சுரோபதி, ஹோமியோபதி, யுனானி மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com