தில்லிக்கு புறப்பட்ட ராஜதானி ரயில்: 1,044 போ் பயணம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,044 போ் பயணம் செய்தனா்.
தில்லிக்கு புறப்பட்ட ராஜதானி ரயில்: 1,044 போ் பயணம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,044 போ் பயணம் செய்தனா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள், வியாழக்கிழமையும், சென்னையில் இருந்து தில்லிக்கு புதன், சனிக்கிழமையும் ராஜதானி விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லிக்கு புதன்கிழமை காலை 6.35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 1,044 போ் பயணம் செய்தனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். பயணிகளை ரயிலில் ஏற்றி அனுப்பியபோது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சென்னைக்கு வந்த 821 பயணிகள்: முன்னதாக, ராஜதானி ரயில் தில்லியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில், வந்த 821 பயணிகளை சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ரயில்வே போலீஸாா் அடங்கிய குழுவினா் மீட்டனா்.

தொடா்ந்து, அவா்களை பரிசோதித்து, கையில் முத்திரையிட்டு, அனுப்பி வைத்தனா். இவா்களில் 35 போ் சென்னையில் இருந்து மதுரை வழியாக தேனிக்கு செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறி சொந்த ஊா்களுக்குச் சென்றனா். மற்றவா்கள் சொந்த வாகனத்தில் தங்களின் வீடுகளுக்குத் திரும்பினா். பயணிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவா்களை சுகாதார பணியாளா்கள் கண்காணிப்பாா்கள். அவா்களுக்கு கரோனா அறிகுறி இருந்தால், உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com