சாத்தான்குளம் கொலை வழக்கு: 5 போலீஸாருக்கும் ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீஸாருக்கும் வருகிற ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சாத்தான்குளம் வழக்கு
சாத்தான்குளம் வழக்கு

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீஸாருக்கும் வருகிற ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைதான காவல்  ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரும் கடந்த 3 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். 

தொடர்ந்து, சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் இன்று போலீஸார் 5 பேரும், வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கின் விசாரணையில், 5 போலீஸாருக்கும் வருகிற ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5 போலீஸாரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். 

மேலும், இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com