ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு     

ஈரோட்டில் நாளை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவதால் நேதாஜி காய்கறி மார்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடினர். 
காய் கறி மார்கெட்டில் குவிந்த மக்கள்
காய் கறி மார்கெட்டில் குவிந்த மக்கள்

ஈரோட்டில் நாளை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவதால் நேதாஜி காய்கறி மார்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடினர். 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா  வைரஸ் இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.  

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது. எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக  கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி நாளை இந்த மாதத்திற்கான  மூன்றாவது  ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதன்படி நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. நாளை காய்கறி கடைகள் மளிகை கடைகள் டாஸ்மாக் கடைகள் ஜவுளி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் என எதுவுமே இயங்காது. 

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் சின்ன மார்க்கெட் உழவர் சந்தை முடிதிருத்தும் கடை செல்போன் சர்வீஸ் கடை ஆட்டோ மொபைல்ஸ் கடை, ஏலம் கூடங்கள், ஹோட்டல்கள் இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் நாளை ஒருநாள் அடைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அம்மா உணவகமும் வழக்கம் போல் செயல்படும். நாளை பொது ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு ஊரடங்கு மீறுவோர் குறித்துக் கண்காணிப்பார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  ஊரடங்கு போது தேவையின்றி வெளியே சுற்றியதாகவும் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை  முழு ஊரடங்கு என்பதால் இன்று காய்கறி கடை மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது இதைப்போல் மீன் கடை மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். 

காய்கறி விலைகள் குறைவாக இருந்ததால் கிலோ கணக்கில் வகைகளை வாங்கிச் சென்றனர் இதேபோல் இன்று டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com