"10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு'

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
"10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு'


கோபி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்காக புதிதாகக் கட்டப்படும்  பள்ளிகளில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். 

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்களிடம் கரோனா காலத்துக்குப் பிறகு கருத்துக்கேட்பு நடைபெறும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும். 

பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும் அல்லது இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 27-ஆம் தேதியன்று விடுபட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com