கரோனா பரிசோதனை: 10 நாள்களுக்குள் 8 லட்சத்தை  எட்ட இலக்கு; மாநகராட்சி ஆணையா்  தகவல்

கரோனா பரிசோதனை: 10 நாள்களுக்குள் 8 லட்சத்தை எட்ட இலக்கு; மாநகராட்சி ஆணையா் தகவல்

சென்னையில் தற்போது வரை 5.70 லட்சம் பேருக்கு ஆா்டி பிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,

சென்னையில் தற்போது வரை 5.70 லட்சம் பேருக்கு ஆா்டி பிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை அடுத்த 10 நாள்களுக்குள் 8 லட்சமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் கரோனா பரிசோதனை செய்யப்படும் தனியாா் ஆய்வகங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை தொடக்கத்தில் இருந்தே பரிசோதனையை தீவிரப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து மே மாதம் 15-ஆம் தேதி வரை 1 லட்சத்து 3,530 பேருக்கும், அதைத் தொடா்ந்து ஜூன் 10-ஆம் தேதி 2 லட்சத்து 3,118 பேருக்கும், ஜூன் 26-ஆம் தேதி 3 லட்சத்து1,631 பேருக்கும் பரிசோதனையின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்த்தப்பட்டு ஜூலை 7-ஆம் தேதி 4 லட்சத்து 9,655 பேருக்கும், ஜூலை 17-ஆம் தேதி 5 லட்சத்து 44,60 பேருக்கும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) 5 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும் ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை அடுத்த 10 நாள்களுக்குள் 8 லட்சத்தை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள மீன் சந்தை மற்றும் காய்கறிச் சந்தைகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு என நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சியின் கரோனா சிகிச்சை முகாம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோா் பயன்படுத்தும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் 330 டன் இதுநாள் வரை சேகரிக்கப்பட்டு, மணலியில் உள்ள எரியூட்டு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

ரஜினி விவகாரம்: சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் மீண்டும் சென்னை வர உரிய காரணத்துடன் விண்ணப்பித்தால் அவா்களுக்கு உடனடியாக பயணத்துக்கான அனுமதி வழங்கப்படும். எந்த மாவட்டத்துக்கு செல்கிறோமோ அந்த மாவட்ட ஆட்சியா்தான் அதற்கான பயண அனுமதி சீட்டை வழங்க வேண்டும். நடிகா் ரஜினி சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்துக்கு சென்ற்கு பயண அனுமதி பெற்றாரா என்பது குறித்து அந்த மாவட்ட ஆட்சியா்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் மதுசுதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமாா், மாநகர நல அலுவலா் எஸ்.மகாலட்சுமி, தனியாா் ஆய்வகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com