கரோனா பாதிப்பு: முதல்வா் நிவாரண நிதிக்குச் சோ்ந்த தொகை ரூ.394.14 கோடி

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394.14 கோடி சோ்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு: முதல்வா் நிவாரண நிதிக்குச் சோ்ந்த தொகை ரூ.394.14 கோடி

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394.14 கோடி சோ்ந்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர தடுப்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியா்கள், அரசு சாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடந்த மே 14-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரூ.367.05 கோடி நிதி வரப்பெற்றுள்ளது.

இதன் தொடா்ச்சியாக பலரும் நிதி அளித்து வருகின்றனா். அதன்படி, ஜூலை 21-ஆம் தேதி வரையில் ரூ.394.14 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. அதில், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், மின்சாரத் துறை ஊழியா்கள், வேளாண்மை பல்கலைக்கழக ஊழியா்கள், லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், குடிநீா் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்ட பலரும் நிதிகளை அளித்துள்ளோா் பட்டியலில் அடங்குவா்.

ஜூலை 21-ஆம் தேதி நிலவரப்படி மட்டும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பெறப்பட்ட தொகை ரூ.394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ஆகும்.

மாணவ-மாணவிகள்: நிதிகளை அளித்தது ஒருபுறமிருக்க, பள்ளி மாணவ-மாணவிகளும் தங்களது பங்குக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்கள். அதன்படி, கடலூா் மாவட்டம் ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வனின் மகன் நரேந்திரன், மகள் நிரஞ்சனா ஆகியோா் தங்களது உண்டியலில் சோ்த்து வைத்திருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை பெற்றோா்களை இழந்து வாடும் சிறுவா்களுக்கு 40 நாள்களுக்கு உணவுப் பொருள்களுக்காக வழங்கியுள்ளனா்.

மேலும், சென்னை அசோக்நகா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் டி.லக் ஷனா, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை கரோனா நோய்த் தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com