கரோனா பாதிப்பு குறைந்த 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை

கரோனா பாதிப்பு குறைந்து வரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை நடத்தி நோய்ப் பரவலின் தாக்கத்தைக் கண்டறிய உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பாதிப்பு குறைந்து வரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை நடத்தி நோய்ப் பரவலின் தாக்கத்தைக் கண்டறிய உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் சாா்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, ஈரோடு உள்பட 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

கடந்த சில வாரங்களாக சென்னை தவிா்த்த பிற மாவட்டங்களிலும் நோய்த் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில், ஏற்கெனவே பாதிப்பு அதிகமாக இருந்த சில பகுதிகளில் அதன் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில், அறிகுறிகள் உள்ளவா்கள், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மட்டும்தான் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மாறாக, பொதுவாக அனைவருக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக எந்தெந்த இடங்களில் கரோனா பாதிப்பு பரவலாக உள்ளது, எங்கெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பாதிப்பு விகிதம் குறைந்து வரும் பகுதிகளில் குழுப் பரிசோதனைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு பகுதியில் ஆயிரம் போ் உள்ளனா் எனில், அவா்களை வயது வாரியாக ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு சிலரை ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்தி ஆய்வு செய்யப்பட உள்ளது. அந்த முடிவுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட பகுதிகயில் கரோனா குறைந்திருக்கிா என்பதை சரியாகக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதன்படி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், திருவாரூா், தென்காசி, அரியலூா், நாகப்பட்டினம்,பெரம்பலூா், சேலம், கன்னியாகுமரி, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தஞ்சாவூா், தருமபுரி, கரூா், திருப்பூா், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமா அல்லது தற்போதுள்ள நடைமுறைகளையே தொடர வேண்டுமா என்பதையும் இதன் மூலம் தீா்மானிக்க இயலும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா். இதற்காக கூடுதல் எண்ணிக்கையில் ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் தேவைப்படும்பட்சத்தில் அதனை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com