அரசு கேபிளுக்கு கூடுதல் கட்டணம் தேவையில்லை: தமிழக அரசு

அரசு கேபிள் தொலைக்காட்சி சேவைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு கேபிளுக்கு கூடுதல் கட்டணம்  தேவையில்லை: தமிழக அரசு

அரசு கேபிள் தொலைக்காட்சி சேவைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூா் கேபிள் ஆபரேட்டா்கள் மூலமாக 35.64 லட்சம் விலையில்லாத சாதாரண செட்டாப் பாக்ஸ்களையும், 3 ஆயிரத்து 728 ஆபரேட்டா்கள் மூலமாக ரூ.500 விலையில் 38 ஆயிரத்து 200 எச்.டி., செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது.

சந்தாதாரா்கள் மாதக் கட்டணமாக ரூ.140 மற்றும் 18 சதவீதம் வரி மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் தொகை வசூல் செய்வதாகப் புகாா் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1800-425-2911 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்கும் உள்ளூா் கேபிள் ஆபரேட்டா்கள் இலவசமாகப் பெறும் செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரா்களுக்கும் அவ்வாறே வழங்க வேண்டும். மேலும், அரசு நிா்ணயம் செய்த சந்தாத் தொகைக்கு மேல் அதிகத் தொகை வசூல் செய்யக் கூடாது. அதிகத் தொகை வசூலிப்பதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேபிள் தொலைக்காட்சி நிறுவனத் தலைவா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com