அருப்புக்கோட்டையில் பொது இடங்களில் மக்கள், முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை எனப் புகார்

பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பொதுமக்கள் பலரும் பின்பற்றாததால் கரோனா நோய்த் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வங்கிகள், ஏடிஎம்கள், அஞ்சலகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பொதுமக்கள் பலரும் பின்பற்றாததால் கரோனா நோய்த் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டு அமலில் உள்ளது.

இவ்விதம்  பல இடங்களிலும் கரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில் அப்பகுதிகளிலிருந்தும் மேலும் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்தும் இரு சக்கர வாகனங்களில்  வருவோர் பலரும் முகக் கவசம் அணிவதில்லை. சில இடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் முகக்கவசம் அணிந்திருந்தாலும், பின்னால் அமரும் குழந்தைகள் மற்றும் ஆண்களும், பெண்களும் முகக் கவசம் அணிவதில்லை. இதில் சில பெண்கள் தங்களின் சேலை முந்தானையை மட்டும் முகத்தில் தற்காலிகமாக மூடி மிகவும் அலட்சியப் போக்குடன் வாகனங்களின் பின் அமர்ந்து செல்கின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் அருப்புக்கோட்டை நகரில் வங்கிகள், ஏடிஎம்கள், அஞ்சலகங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் கூட முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மிகுந்த அலட்சியத்துடன் சுற்றித் திரிகின்றனர்.

வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களில் காவலாளிகள் முகக் கவசம் அணிதலை வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்தாலும், மறுமுறை வரும்போது முகக் கவசம் அணிந்து வருவோம் என வீணான பொய்க் காரணங்களை அம்மக்கள் கூறி வருகின்றனர்.

எனவே இத்தகையோருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்து நடவடிக்கையைத் தீவிரமாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறினாலும் யாதொரு நடவடிக்கையும் இல்லையெனப் புகார் எழுந்துள்ளது. முகக் கவசம் அணிதல் மற்றும் சமுக இடைகவளியைப் பின்பற்றாதோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மீண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com