10 ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் ஆழ்துளை கிணறுகள்

10 ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் ஆழ்துளை கிணறுகள்

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழு நிதியில் இருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் 10 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கியது.

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழு நிதியில் இருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் 10 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கியது.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் ஏ.என்.குப்பம், மேலக்கழனி, புதுப்பாளையம், ஜி.ஆர்.கண்டிகை,அயநெல்லூர், அரசூர்,மங்கலம்,பெருவாயல், கீழ்முதலம்பேடு,ஆத்துப்பாக்கம் ஆகிய 10 பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த திட்டம் 10 ஊராட்சிகளுக்கும் ஒப்படைக்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி, ஒன்றிய பொறியாளர் நரசிம்மன்,ஒன்றிய கவுன்சிலர்கள்  ஜோதி, ஜெயந்தி கஜா, திமுக ஒன்றிய பிரதிநிதி சி.கருணாகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி பங்கேற்று  ஆழ்துளை கிணறுகள் அமைக்க தேவையான மின்மோட்டார்கள், உதிரி பாகங்களை ஊரட்சிமன்ற தலைவர்களிடம் ஒப்படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com