ஆந்திரத்துக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ்: அரசாணை வெளியீடு

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஆந்திரத்துக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ்: அரசாணை வெளியீடு
ஆந்திரத்துக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ்: அரசாணை வெளியீடு


சென்னை: ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து தினமும் ஆந்திராவுக்குச் சென்று வேலை செய்துவிட்டு தமிழக தொழிலாளர்கள் மாநிலத்துக்கு திரும்புகிறார்கள். இவர்களுக்கு மாத இ-பாஸ் வழங்குமாறு தொழில்சாலை நிர்வாகங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்தது.

இந்த மாத இ-பாஸ் பெற தனிநபர் விண்ணப்பிக்க இயலாது, தொழிற்சாலைகள் தரப்பில் தான் விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிக்கும் தொழிற்சாலையே, வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் நிபந்தகைள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேப்போல, ஒரு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல மாதந்தோறும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், ஒரு மாதம் முடிந்ததும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com