கீழையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பெற்ற கடன்களை  தள்ளுபடி செய்திட கோரியும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ ரத்து செய்திட செய்திட கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட‌ வாழக்கரையில்  மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய  கவுன்சிலருமான டி.செல்வம் துவக்கி வைத்தார்.

இதேபோல திருப்பூண்டியில் ஒன்றிய விவசாய சங்க தலைவர் ஏ. செல்லையன் தலைமையிலும், சிந்தாமணியில் விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும் ,பெரியதும்பூர் ஊராட்சியில் ‌மாவட்டக்குழு  உறுப்பினர் கண்ணையன் தலைமையிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல கீழையூரில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையிலும் தவமணி முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார். எட்டுக்குடி ஊராட்சியில் கிளைச் செயலாளர் மாசேதுங் தலைமையிலும் பாலாஜி முன்னிலையிலும் இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து பல்வேறு கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com